கல்வி, மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சிக்கு பிட்ஸ் பிலானி-சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்ட பிட்ஸ் பிலானி துணைவேந்தர் வி.ராமகோபால் ராவ், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்ட பிட்ஸ் பிலானி துணைவேந்தர் வி.ராமகோபால் ராவ், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி.

Updated on: 
1 min read

சென்னை: கல்வி, மாணவர் பரி​மாற்​றம் மற்​றும் கூட்டு ஆராய்ச்சி தொடர்​பாக சென்னை ஐஐடி-​யுடன் பிட்ஸ் பிலானி கல்வி நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

இந்​தி​யா​வில் உள்ள முன்​னணி தொழில்​நுட்​பக்​கல்வி நிறு​வனங்​களில் ஒன்​றான பிட்ஸ் பிலானி நிறு​வனம், கல்​வி, ஆராய்ச்​சி, மாணவர் பரி​மாற்​றம் தொடர்​பாக சென்னை ஐஐடி-​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

சென்னை ஐஐடி​யில் செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிட்ஸ் பிலானி துணைவேந்​தர் வி.​ராமகோ​பால் ராவ், ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி ஆகியோர் ஒப்​பந்த ஆவணங்​களை பரஸ்​பரம் பரி​மாறிக்​கொண்​டனர்.

இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் 5 ஆண்​டு​கள் அமலில் இருக்​கும். அதன்​படி, பிட்ஸ் பிலானி மாணவர்​கள் குறிப்​பிட்ட காலம் சென்னை ஐஐடி​யில் கல்வி பயில்​வதுடன் ஆராய்ச்சி பணி​யிலும் ஈடு​படலாம்.

புராஜெக்ட் ஒர்க் பணி​யை​யும் மேற்​கொள்​ளலாம். அதே​போல், ஐஐடி மாணவர்​கள் பிட்ஸ் பிலானி​யில் படிக்​கலாம். ஆராய்ச்சி பணி​களை மேற்​கொள்​ளலாம். இதற்​காக இரு கல்வி நிறு​வனங்​களின் மாணவர்​களும் எவ்​வித கூடு​தல் கல்விக்​கட்​ட​ணம் ஏதும் செலுத்த தேவை​யில்​லை.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் தொடர்​பாக ஐஐடி இயக்​குநர் காமகோடி கூறுகை​யில், “வளர்ந்து வரும் புதிய தொழில்​நுட்​பங்​கள் முதல் சுகா​தார முயற்​சிகள் வரை பல்​வேறு துறை​களில் இரு கல்வி நிறு​வனங்​களும் இணைந்து செயல்பட முன்​வந்​திருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

இதனால் இரு நிறு​வனங்​களும் பல்​வேறு நடை​முறை​களில் பயன்​பெறும். கல்வி மற்​றும் ஆராய்ச்சி வளங்​களை பரஸ்​பரம் பயன்​படுத்​திக்​கொள்​வ​தால் ஆசிரியர்​களும், மாணவர்​களும் பெரிதும் பயன்​பெறு​வர்” என்​றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in