வீடு தேடிச் செல்லும் நூலகம்: ஆம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

மக்களிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்க...
வீடு தேடிச் செல்லும் நூலகம்: ஆம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
Updated on
2 min read

திருப்பத்தூர்: வீடு தேடிச் செல்​லும் நடமாடும் நூலகம் மூலம் அடித்​தட்டு மக்​களிடையே வாசிப்​புத் திறனை ஊக்குவிக்​கும் ஆம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியருக்​குப் பாராட்​டுக்​கள் குவிகின்றன.

திருப்​பத்​தூர் மாவட்​டம் மாதனூர் அடுத்த பெத்​ல​கேம் நகராட்சி நடுநிலைப் பள்​ளி​யின் ஆசிரியர் சரவணன் தான் கற்ற கல்வி அனை​வரை​யும் சென்​றடைய வேண்​டும் என்ற நோக்​கில், சமூக அக்​கறை​யுடன் நடமாடும் நூல​கம் ('நட​மாடும் நூல​கம் – வாசி​யுங்​கள் - கற்​றுக்​கொள்​ளுங்​கள் -வள​ருங்​கள்') என்ற புது​மை​யான முயற்​சியை முன்​னெடுத்​துள்​ளார்.

இதன் ஒரு பகு​தி​யாக, ஆம்​பூர் அருகே உள்ள நரிக்​குறவர் பகுதியில் வசிக்​கும் மாண​வர்​கள் மற்​றும் அவர்​களது பெற்​றோர்​களின் வாசிப்​புத் திறன், மொழி திறன் மற்​றும் சிந்​தனைத் திறனை மேம்​படுத்​தும் நோக்​கில், இரு சக்கர வாக​னத்​தில் சிறிய அளவி​லான நடமாடும் நூல​கத்தை உரு​வாக்​கி, நேரடி​யாக அவர்​களது குடி​யிருப்பு பகு​தி​களுக்கே சென்று மாணவ, மாணவி​கள் மட்​டுமின்றி பொது​மக்​களும் வாசிப்பை நேசிக்க வேண்​டும் என்ற நோக்​கில் செய​லாற்றி வரு​கி​றார்.

இந்த நடமாடும் நூல​கத்​தில் சிறு​வர் சிறுகதை புத்​தகங்​கள், வாழ்க்கை வரலாறு நூல்​கள், அறி​வியல் நூல்​கள், பொது அறிவு நூல்​கள், தமிழ் மற்​றும் ஆங்​கில நாளிதழ்​கள், குழந்​தைகளுக்​கான சிறுகதைகள், நீதிக் கதைகள் உட்பட பல்​வேறு வாசிப்பு புத்​தகங்​கள் இடம் பெற்​றுள்​ளன. இதன் மூலம் மாண​வர்​கள் தங்​களது விருப்​பத்​துக்​கேற்ப புத்​தகங்​களைத் தேர்ந்​தெடுத்து வாசிக்​க​வும், குறிப்​பிட்ட காலத்​துக்கு தங்​களது வீட்​டுக்கு எடுத்​துச் சென்று குடும்ப உறுப்​பினர்​களு​டன் பகிர்ந்து படிக்​க​வும் வாய்ப்​பை​யும் ஆசிரியர் சரவணன் ஏற்​படுத்​தித் தரு​கி​றார்.

இது மட்​டுமின்றி தினசரி தமிழ் மற்​றும் ஆங்​கில நாளிதழ்​களை மாண​வர்​கள் சத்​த​மாக வாசிக்​கும் ‘செய்தி வாசிப்​பு', சிறுகதைகளைப் படித்து அதன் கருத்​துகளைப் பகிரும் ‘கதை பகிர்​வு', புதிய சொற்​களை அறி​யும் ‘சொல்​வளம் வளர்ப்​பு', வாசித்த நூலின் சாராம்​சத்தை விளக்​கும் ‘புத்தக உரை​யாடல்', பெற்​றோர்​களு​டன் இணைந்து குடும்ப வாசிப்பு போன்ற செயல்​பாடு​களும் தொடர்ந்து நடத்​தப்​படு​கின்​றன. கல்​வி​யில் பின்​தங்​கும் அபா​யம் உள்ள சமூகங்​களை நேரடி​யாகச் சென்​றடைந்​து, ‘ஒவ்​வொரு வீட்​டிலும் ஒரு புத்​தகம் – ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் ஒரு வாசிப்​பாளர்' என்ற இலக்கை நோக்கி இந்த முயற்சி முன்​னெடுக்​கப்​படு​கிறது.

குறிப்​பாக, பள்ளி நேரத்​துக்கு வெளி​யிலும் மாண​வர்​கள் புத்​தகங்​களு​டன் தொடர்​பில் இருக்​க​வும், கைப்​பேசி பயன்​பாட்​டிலிருந்து வாசிப்பு பழக்​கத்​துக்கு அவர்​களை ஈர்க்​க​வும் இந்த நடமாடும் நூல​கம் பெரிதும் உதவி​யாக இருப்​ப​தாக​வும், இந்த புதிய முயற்​சி​யின் மூலம் நரிக்​குறவர் பகு​தி​யில் வசிக்​கும் மாண​வர்​களிடையே வாசிப்​பின் மீதான ஆர்​வம், புதிய சொற்​களைக் கற்​றுக்​கொள்​ளும் திறன், தன்​னம்​பிக்​கை​யுடன் பேசும் திறன், நாளிதழ் வாசிக்​கும் பழக்​கம் மற்​றும் சமூக விழிப்​புணர்வு குறிப்​பிடத்​தக்க அளவில் வளர்ந்து வரு​வ​தாக ஆசிரியர்​கள் மற்​றும் பெற்​றோர்​கள் மகிழ்ச்​சி​யாக இருப்​ப​தாக ஆசிரியர் சரவணன் தெரி​வித்​துள்​ளார்.

தேசிய கல்விக் கொள்கை வலி​யுறுத்​தும் சமத்​து​வ​மான கல்​வி, சமூகப் பங்​கேற்பு மற்​றும் அடிப்​படை வாசிப்​புத் திறன் (எப்​எல்​என்) ஆகிய இலக்​கு​களை நடை​முறைப்​படுத்​தும் சிறந்த முன்​மா​திரி​யாக இந்த மொபைல் நூலக திட்​டம் திகழ்​வ​தாக ஆசிரியர் சரவணன் தெரி​வித்​துள்​ளார். இவரது, இந்த புதிய முயற்​சிக்​குப் பொது​மக்​களிடையே பெரும் வரவேற்பு பெற்று அவருக்​குப் பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன.

வீடு தேடிச் செல்லும் நூலகம்: ஆம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
“பரந்தூர் திட்டம் ரத்தால் தமிழக வளர்ச்சி 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம்...” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in