Published : 01 Jun 2023 06:32 AM
Last Updated : 01 Jun 2023 06:32 AM

சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.

நடப்பு கல்வியாண்டு (2023-24)மாணவர் சேர்க்கை இணையதளவிண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்படி பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x