

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 2023 ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன்வழி படிப்புகளில் சேரவிரும்புவோர் www.ignouadmission.samarth.edu.in (தொலைதூரக்கல்வி படிப்புகள்), www.ignouiop.samarth.edu.in (ஆன்லைன்வழி படிப்புகள்) ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அனைத்து படிப்புகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும்.