சென்னை ஐஐடியில் கல்வி மேம்பாட்டுக்காக15 ஆய்வு மையம் திறப்பு

சென்னை ஐஐடியில் கல்வி மேம்பாட்டுக்காக15 ஆய்வு மையம் திறப்பு
Updated on
1 min read

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களை ஆராய்ச்சியில் மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, அவைகளுக்கு நிதி அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐஐடியும் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினென்ஸ்) தேர்வு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் நிதியின் கீழ் 15 ஆராய்ச்சி பணிகளுக்கான ஆய்வு மையங்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டன.

இதில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வு மையங்கள் குறித்துவி.காமகோடி கூறும்போது, ‘‘இந்த மையங்கள் சர்வதேச தரத்தில் இருப்பதோடு, நிறுவனத்துக்கு மேன்மையளிக்கும் வகையில் பங்காற்றும். இதில் இருந்து ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகும் என நம்புகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in