ஜூன் 27- ஜூலை 5 வரை 10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு

ஜூன் 27- ஜூலை 5 வரை 10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 27 - ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 23-27-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ல் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

துணைத் தேர்வு மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம், துணைத் தேர்வுக்கான விரிவான காலஅட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in