Published : 17 May 2023 06:10 AM
Last Updated : 17 May 2023 06:10 AM
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு விடுதிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான (7, 8, 9, 11-ம் வகுப்புகள்) மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் மே 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டரங்குகளில் நடைபெற உள்ளன.
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை (www.sdat.tn.gov.in) பூர்த்தி செய்து மே 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மாவட்ட அளவிலான தேர்வு போட்டி 24-ம் தேதி காலை7 மணிக்கு பெரியமேடு ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். கூடுதல் விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை ஷெனாய் நகரில் உள்ள அலுவலகத்தில் அல்லது 7401703480 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT