மதுரை அரசு கல்லூரி மாணவி வெளிநாட்டில் கல்வி கற்க ரூ.30.50 லட்சம் கடன்

மதுரை அரசு கல்லூரி மாணவி வெளிநாட்டில் கல்வி கற்க ரூ.30.50 லட்சம் கடன்
Updated on
1 min read

மதுரை: வெளிநாட்டில் உயர் கல்வி கற்க, மதுரை அரசு கல்லூரி மாணவிக்கு பிணையின்றி ரூ. 30.50 லட்சம் கல்விக் கடனுக்கான ஆணையை, மதுரை எம்பி சு.வெங்கடேசன் வழங்கினார்.

மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டவ் பழுது நீக்கும் தொழிலாளியின் மகள் சிந்து, இவர் மீனாட்சி அரசு கல்லூரி மாணவி. இவருக்கு இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க பிணையில்லாமல் ரூ.30.50 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாசி வீதியிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் எம்பி சு. வெங்கடேசன் பங்கேற்று மாணவி சிந்துவுக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கினார். வங்கியின் மண்டல மேலாளர் டி.கே.அபிஜித், துணை மண்டல மேலாளர் ஜி.இளஞ்செழியன், கிளை மேலாளர் ஜே.சார்லஸ், வணிக மேம்பாட்டு அதிகாரி என்.சம்பத்குமார், முதன்மைக் கிளை மேலாளர் மெரின் ஜிம், முதுநிலை மேலாளர் சி. மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

புின்னர் எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதத்துக்கு மேல் கல்விக் கடன் வழங்கி தேசிய அளவில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மதுரை மாவட்டம் ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி 2-ம் இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் ரூ.150 கோடி வரை கல்விக் கடன் வழங்க இலக்கு வைத்துள்ளோம்.

கடந்தாண்டு மாணவர் யோகேஸ்வரன் என்பவருக்கு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி படிக்க பிணையின்றி ரூ. 40 லட்சம் கடனாக பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கியது.

தற்போது அரசு கல்லூரி மாணவி சிந்துவுக்கு இங்கிலாந்து வேல்ஸ் நகரில் உள்ள ஹார்டியப் யுனிவர் சிட்டியில் முதுகலை படிக்க ரூ. 30 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கியதற்கு பாராட்டுகள். உயர் கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது. அந்த தடைகளை அகற்றுவதுதான் வங்கிகளின் முக்கிய வேலை. அதை யூனியன் வங்கி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in