

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கிடாம் பாளையம் ஐயப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப் படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்கொள் ளப்பட்டன.
இந்நிலையில், புதிய கட்டிடத்தின் கான்கிரீட் தூண்கள் தரமற் றுள்ளதாக கூறி, சமூக வலை தளத்தில் வீடியோ வைரலானது. கான்கிரீட் தூண்களை மிக எளிதாக கைகளாலேயே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தட்டும்போது கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து விழும் காட்சிகள் இடம் பெற் றிருந்தன.
இதற்கிடையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து, கான்கிரீட் தூண்களை சேதப்படுத்தியதாக கூறி வீடியோவில் இடம் பெற்றிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கடலாடி காவல் துறையினர் விசா ரணைக்கு அழைத்துள்ளனர். இது பெற்றோர் மற்றும் கிராம மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “கிடாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் தரமாக கட்டவில்லை. இதனை, ஊராட்சி ஒன்றிய அதிகாரி கள் முறையாக ஆய்வு செய்ய வில்லை. கைகளால் தட்டியபோது, கான்கிரீட் கலவை கொட்டுகிறது.
புதிய கட்டிடம் கட்டும் பணியில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டி காட்டிய இளைஞர்களை, காவல்துறையினர் மூலம் மிரட்டுவதை கைவிட்டு, கட்டி டத்தை தரமாக கட்டுவதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.