

யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இதையொட்டி, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறநெறி, வேதங்கள், யோகா, ஆயுர்வேதம், சமஸ்கிருதம், இசை, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசிவகுத்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்க்கமுடியும். இதற்கான வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கிரெடிட் மதிப்பெண்: இவ்வாறான படிப்புகளை கிரெடிட் மதிப்பெண்கள் பெறும்வகையில் உயர்கல்வி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களும் அறிவுறுத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.