இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு உற்பத்தி நிறுவனம் நார்வே பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நார்வே பல்கலைக்கழகத்துடன் கல்வி, ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நார்வே பல்கலைக்கழகத்துடன் கல்வி, ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Updated on
1 min read

வண்டலூர்: இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (ஐஐஐடிடிஎம்) நார்வேயின் அக்டர் பல்கலைக்கழகத்துடன் கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும்மாணவர் பரிமாற்றத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனமும் நார்வேயின் அக்டர் பல்கலைக்கழகமும் பரஸ்பர நன்மை பயக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அன்மையில் கையெழுத்திட்டுள்ளன.

மாணவர் பரிமாற்றம்: இந்த ஒப்பந்தத்தில் ஆக்டர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் ஜோரன் மோனா ஸ்கொஃப்டெலன் கிஸ்லெஃபோஸ் மற்றும் ஐஐஐடிடிஎம் இயக்குநர், பேராசிரியர் எம்.வி. கார்த்திகேயன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒத்துழைப்பு தொடக்கத்தில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ஆர்வமுள்ள பிற துறைகளில் மேற்கொள்ளப்படும். பரஸ்பர ஆர்வமுள்ள ஆராய்ச்சிப் பகுதிகளில் ஆசிரியப் பரிமாற்றத்துக்கு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆராய்ச்சி தவிர, இந்த ஒப்பந்தம் மாணவர்களின் பரிமாற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ஐஐஐடிடிஎம் மாணவர்கள் அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு நார்வே பல்கலைக்கழகத்தில் தங்கள் படிப்பைத் தொடரலாம். அதேபோல் மாணவர்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனகருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in