

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில், நவம்பர் 2022, ஏப்ரல் 2023-ம் ஆண்டுக்கான பருவம், அல்பருவம் மற்றும் அரியர் தேர்வுகளும் ஒன்றாக, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகின்றன.
இத்தேர்வை எழுதும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக (www.mkudde.org) விண்ணப்பிக்க வேண்டும். தாமதக் கட்டணமின்றி மே 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல், ரூ.500 தாமதக் கட்டணத்துடன் மே 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 1-ம் தேதி தேர்வு தொடங்குகிறது.
அகமதிப்பீட்டு ஒப்படைப்பு அவசியம். இது தொடர்பான தகவல்களும் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இளநிலை, முதுநிலை எம்பிஏ, எம்சிஏ, முதுநிலை டிப்ளமோ பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களின் திட்டப்படிகளை (புராஜக்ட்) மே 30-ம் தேதிக்குள் தொலை நிலைக் கல்வியின் கூடுதல் தேர்வாணையர், காமராசர் பல் கலைக்கழகம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்து இலக்க பதிவெண் கொண்ட மற்றும் அதற்கு முந்தைய பதிவெண்களை உடைய முன்னாள் மாணவர்கள் தங்களின் தேர்ச்சி பெறாத பாடங் களுக்கான (அரியர்) தேர்வை எழுதுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு. இத்தகவலை, கூடுதல் தேர் வாணையர் சல்மா தெரிவித்துள்ளார்.