நீண்டகாலம் பள்ளிக்கு வராதவர்களின் விவரங்களை தர உத்தரவு

நீண்டகாலம் பள்ளிக்கு வராதவர்களின் விவரங்களை தர உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இந்த ஆண்டு 10, 11, 12-ம்வகுப்பு பொதுத் தேர்வுகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து இடைநின்றவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வெழுத வைப்பதற்கான பணிகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதேநேரம் வரும் கல்வியாண்டிலும் இந்நிலை தொடரக்கூடாது என்ற அடிப்படையில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்றுமே 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவுறுத்திஉள்ளது.

மேலும், முதல்வரின் மண்டல ஆய்வு கூட்டத்திலும் இந்த விவகாரம் சார்ந்து விவாதிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in