

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-86-ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கோவல் நண்பர்கள் குழு என்ற பெயரில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செய்து வருகின்றனர்.
வாசிப்பின் மீதும் பற்றுதல் கொண்ட இக்குழுவினர் நேற்று திருக்கோவிலூர் நூலகத்திற்கு அ.சண்முக சுந்தரம் தலை மையில் வந்தனர். அப்போது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 5 நூலடுக்குகளை நூலகப் பயன்பாட்டிற்கு நன்கொடையாக வாசகர் வட்ட குழுத் தலைவர் கவிஞர் சிங்கார.உதியன், நல்நூலகர் மு.அன்பழகன் ஆகியோரிடம் வழங்கினர்.