Published : 27 Apr 2023 06:30 AM
Last Updated : 27 Apr 2023 06:30 AM

அனைத்திந்திய அளவில் நீட் மாடல் தேர்வு - கட்டணமின்றி எழுத லிம்ரா அழைப்பு

சென்னை: நீட் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டும் 12 மாடல் தேர்வுகளை, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் வழியாக நடத்துகிறது.

நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1,47,581 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள மொத்த இடங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள 4,025 இடங்கள் மட்டுமே நம் தமிழக மாணவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

எனவே, கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் அனைத்து வழிகளிலும் தேர்வுக்காக மாணவர்கள் உழைத்து வருகின்றனர். நம் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாக நீட் மாடல் தேர்வை ஆண்டுதோறும் ஆன்லைனில் நடத்துகிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பயிற்சி தரும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இத் தேர்வுக்கான கேள்வித் தாள்களை வடிவமைத்துத் தந்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாக இது இருக்கும். சென்ற ஆண்டு இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தன என இத்தேர்வை ஆன்லைனில் எழுதிய மாணவர்கள் கூறி இருந்தனர்.

இந்த இலவச மாடல் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நீட் தேர்வு பதிவெண், பிறந்த நாள், முகவரி மற்றும் மொபைல் எண் தந்து பதிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் தரப்படும். பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இணையதளம் சென்று, லாக் இன் செய்து தேர்வை எழுதலாம்.

லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழக்கமாக இத்தேர்வுக்கு ரூ.999 கட்டணமாக வசூலிக்கும். தற்போது `இந்து தமிழ் திசை' வழியாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எந்தக் கட்டணமும் இன்றி மாடல் தேர்வுகளை எழுதும் சலுகையை வழங்குகிறது.

இந்த கட்டணம் இல்லா மாடல் நீட் தேர்வை எழுதித் தங்கள் திறன் அறிய விருப்பம் உள்ள மாணவர்கள் ஏப்.30-க்குள் பதிந்து கொள்ள வேண்டும். விவரங்களுக்கு 9445783333 / 9445483333 / 9952922333 எண்களில் அழைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x