

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மழை நீரில் கரையும் செங்கலை வைத்து பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை அருகே ஆலங் குளத்தில் கல்குறிச்சி அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.19 லட் சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணியை கடந்த ஆண்டு டிசம்பரில் எம்எல்ஏ தமிழரசி தொடங்கி வைத்தார்.
கட்டிடம் பாதியளவு கட்டி முடித்த நிலையில் மீதி செங்கற்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட் டிருந்தன. சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த மழையில் அடுக்கி வைத்திருந்த செங்கற்கள் கரைந்தன. மழைநீருக்கே கரையும் செங்கற்கள் என்பதால் அதன் தரம் மோசமானதாக இருக்கும் என மக்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், மழை நீரில் கரையும் செங்கல்லை வைத்து பள்ளிக் கட்டிடம் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்காணிக்காதது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், `மழை நீரில் செங்கல் கரைந்துள்ளது. கைக ளாலே செங்கலை உடைக்க முடிகிறது. இத்தகைய தரமற்ற செங்கலை வைத்து பள்ளிக் கட்டிடம் கட்டி வருகின்றனர். இது மாணவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
இதனால் தரமின்றி கட்டிடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டி டத்தை இடித்துவிட்டு, தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன் படுத்தி புதிய கட்டிடத்தைக் கட்ட வேண்டும்' என்றனர்.