Published : 03 Apr 2023 05:07 AM
Last Updated : 03 Apr 2023 05:07 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு - ஏப்.10 முதல் விடைத்தாள் திருத்தும் பணி

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெறுகிறது.

இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு முடிவதை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10 முதல் 21-ம் தேதி நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x