

சென்னை: தொலைதூரக் கல்வியில் டேட்டா சயின்ஸ் படிப்பை விரைவில் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக உயர் கல்வி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பை விரைவில் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக உயர் கல்வி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அடுத்தாண்டு தொலைதூர முறையில் B. Sc (Data Science), MBA (Data Analytics) போன்ற வளர்ந்து வரும் துறையில் புதிய படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.