10-ம் வகுப்பு அறிவியல் பாட செயல்முறை தேர்வு இன்று தொடங்குகிறது

10-ம் வகுப்பு அறிவியல் பாட செயல்முறை தேர்வு இன்று தொடங்குகிறது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 10-ம்வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறைத் தேர்வுகள் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மாநிலம் முழுவதும் 9.38 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 48 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

மேலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் அறிவியல் செயல்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

ஒரு சுற்றுக்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்வுத் துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும், செயல்முறைத் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in