

புதுச்சேரி: ஜனநாயகம் சார்ந்த சமூகவியல் பார்வையை மாணவர்களிடையே விசாலப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் சட்டப்பேரவை நிகழ்வை அரசுப் பள்ளி மாண வர்கள், பேரவை நடக்கும் நாளில் வந்து நாள்தோறும், பார்க்கும் முறை தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பேரவை நிகழ்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள ஆட்சியர் மணிகண்டன் முயற்சி எடுத்தார். அதன்படி நேற்று முதல் தினந்தோறும் அரசுப் பள்ளிகளில் இருந்து பேரவைக்கு 10 மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு பேரவைநி கழ்வுகளை பார்த்து அறிய ஏற்பாடு செய்தார்.
அரசு நிர்வாகத்தை அறியவும்மக்களுக்கான பணிகள் சட்டப் பேரவையில் நிகழ்வதை காணவும்இம்முயற்சி மேற்கொள்ளப்பட் டுள்ளது. முதல் நாளான நேற்று திருவள்ளுவர் அரசுப் பள்ளியில் இருந்து 9, 10-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் சட்டப்பேரவைக்கு வந்த னர். அவர்கள் பார்வையாளர் மாடத்தில் முதல் இரு வரிசையில் அமர்ந்து, பேரவை நிகழ்வுகளை பார்த்தனர்.
அவர்களுக்கு பேர வைத்தலைவர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் மணிகண்டன் நேரில் வந்து அவர்களிடம், அரசு நிர்வாகத்தை அறியவும், சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் பணிகள் தொடர்பாகவும் விளக்கினார். தங்கள் ஆசிரியையுடன் வந்திருந்த 10 மாணவிகளும் பேரவை நிகழ்வுகள் மற்றும் அங்கிருந்த மக்கள் பிரதிநிதிகள் அறைகளை பார்வையிட்டு, அது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.