

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பிஎச்டி ஆராய்ச்சி பட்டபடிப்புக்கான பகுதி நேர மற்றும் முழு நேர சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. www.b-u.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 ஆராய்ச்சி படிப்புக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500 (சாதிச் சான்றிதழுடன்) இணையவழி மூலம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
2023-ம் ஆண்டு ஜூலை மாதம் பிஎச்டி பகுதி நேர, முழு நேர பட்டபடிப்புக்கான சேர்க்கை ஆகஸ்ட் 2022 பொது நுழைவுத் தேர்வு (சிஇடி) அடிப்படையிலும், பல்கலை.. விதி மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.