விருத்தாசலம் | எரப்பாவூரில் போதிய வகுப்பறை இல்லாததால் கிராம சேவை கட்டிடத்தில் அமர்ந்து பயிலும் மாணவர்கள்

எரப்பாவூரில், கிராம சேவை மையக் கட்டிடத்தில் அமர்ந்து பயிலும் மாணவர்கள்.
எரப்பாவூரில், கிராம சேவை மையக் கட்டிடத்தில் அமர்ந்து பயிலும் மாணவர்கள்.
Updated on
1 min read

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எரப்பாவூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை இப்பள்ளியில் 90 மாணவர்கள் படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள கிராம சேவை மையக் கட்டிடத்தில் அமர்ந்து பயின்று வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆசிரியர்களி டம் கேட்டபோது, “கடந்த ஆண்டு 126 மாணவர்கள் பயின்றனர். தற்போது 90 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இதற்கு காரணம் வகுப்பறை பற்றாக்குறையே. மாணவர்க ளுக்கான பெஞ்ச் இருக்கிறது.

அவற்றை வகுப்பறையில் போட இடமில்லை. பாதி இடங்கள் அந்த பொருட்களே வைத்து பாதுகாப்பதற்கே போதுமானதாக உள்ளது. கூடுதல் வகுப்பறை கேட்டு ஆட்சியர், எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் இதுவரை கூடுதல் வகுப்பறை கட்டிடம் கிடைத்தபாடில்லை” என்றார்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டபோது, “இதுதொடர்பாக வட்டாரக் கல்வி அலுவலரை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கோரியுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் கூடுதல் வகுப்பறைக்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.எரப்பாவூரில், கிராம சேவை மையக் கட்டிடத்தில் அமர்ந்து பயிலும் மாணவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in