

புதுடெல்லி: பல்கலைக்கழங்களில் புதிய விளையாட்டுகளை வளர்த்தெடுப் பது தொடர்பான கருத்தரங்கு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
இதன் 4-வது அமர்வில் சவுதி யோகா கமிட்டி தலைவர் நவுஃப் அல்-மார்வல் பங்கேற்று பேசியதாவது: விளையாட்டுத் துறையில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தின் குறிக்கோளை அடை வதற்கு விளையாட்டுகளில் இளை ஞர்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும். யோகாசனம் பயிற்சி செய்வோருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பலன்கள் ஏற்படுகிறது.
எனவே யோகாவை பயிற்று விக்க சவுதியின் முக்கிய பல்கலைக்கழகங்களுடன் அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். யோகாசனங்களை சிறப்பாக செய்பவர்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பங்கேற்கச் செய்வோம். இவ்வாறு மார்வல் கூறினார்.