

சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடப்பாண்டு முதல் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (சீட்டா) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ல், சீட்டா தேர்வு மார்ச் 26-ல் நடைபெறவுள்ளது.
இவ்விரு தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு பிப்.1-ல் தொடங்கியது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (பிப்.28) முடிகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் www.tancet.annauniv.edu என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்கலாம்.