

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரு’ காலணி உற்பத்தி நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு நடத்திய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சி யர் மணிகண்டன் பரிசுகளை வழங் கிப் பாராட்டினார்.
‘நடந்தால் நன்மையே நடக்கும்’ என்ற தலைப்பில் நடைபயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரு’ காலணிகள் உற்பத்தி நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் நடத்தின.
இதில் மாவட்ட அளவில் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ‘இந்து தமிழ் திசை’ புதுச்சேரி விளம்பர மேலாளர் கெளசிக், முதுநிலை விற்பனை அலுவலர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி ஆட்சியர் மணி கண்டன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
பரிசு பெற்றவர்கள் விவரம்: வண்ணம் தீட்டுதல் போட்டி: பாகூர் அரசு நடுநிலைப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் கமலஷே் முதல் பரிசும், புதுச்சேரி சுசிலபாய்அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினிஇரண்டாம் பரிசும், மேட்டுப் பாளையம் அரசு தொடக்கப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மூன்றாம் பரிசும் வென்றனர்.
கட்டுரைப்போட்டி ஜூனியர் பிரிவு: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ஷர்மிளாஸ்ரீ முதல் பரிசும், லாஸ்பேட்டை நாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் விஷ்ணு இரண்டாம் பரிசும், பாகூர் பாரதியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் தீபன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
இப்போட்டியின் சீனியர் பிரிவில் கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ முதல் பரிசும், முதலியார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சோனா இரண்டாம் பரிசும், பாகூர் பாரதியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் அமுதவன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.