பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல் இன்று முதல் திருத்தம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல் இன்று முதல் திருத்தம் செய்யலாம்
Updated on
1 min read

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் இன்று (பிப். 20) முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொள்வதற்கு தற்போது இறுதிவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இன்று (பிப்ரவரி 20) முதல் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in