தொடர் போராட்டம்: பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு திட்டம்

தொடர் போராட்டம்: பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு திட்டம்
Updated on
1 min read

மதுரை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு பிரேம்குமார், நிதிக் காப்பாளர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களிடம் 1.4.1990 முதல் 31.3.2019 வரை 29 ஆண்டுகளாகப் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815-ஐ சென்னை மாநில கணக்காயர் அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது.

உரிய அலுவலர்களிடம் ஜனநாயக ரீதியாக முறையீடு செய்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in