

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 2023-24-ம் ஆண்டு சேர்க்கை நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி கிராமிய பல்கலைக் கழகத்தில் 13 இளநிலை, 3 ஒருங்கிணைந்த இளம் அறிவியல் உடனான கல்வியியல், 2 ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கை பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.
சேர விரும்பும் மாணவர்கள் https://cuet.samrath.ac.in-ல் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு ஒவ்வொன்றிலும் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள், குறிப்பேடு, மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் துறைக்கு எந்தெந்த தாள்களை எழுத வேண்டும் போன்ற தகவல்களை www.ruraluniv.ac.in எனும் பல்கலைக்கழக இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மார்ச் 12-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.