சைனிக் பள்ளிகளில் கல்விக் கட்டண சலுகைகள்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புது டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும்.

இதேபோல், சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்கள், மாநில அரசின் ஊக்கத்தொகை பெற்றவர்கள் ஆகியோர் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள்.

பெற்றோரின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு 2020-21 நிதியாண்டில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என சைனிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில், சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் அவர்களது கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை (ஆண்டிற்கு ரூ.40,000-க்கு மிகாமல்) மத்திய அரசு வழங்கும்.

மக்களவையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் எழுப்பியக் கேள்விக்கு, மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in