

கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், கோவை அவிநாசி சாலை கொடிசியா அருகேயுள்ள மண்டல அறிவியல் மையத்தில் ரோபோட்டிக்ஸ் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின் தமிழ்கோவன் தலைமை வகித்தார். பெ.தங்கதுரை வரவேற்றார். அறிவியல் தொடர்பாளர் க.லெனின்பாரதி பயிலரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஆசிக் ரகுமான் மற்றும் சல்மான் ஆகியோர் அடிப்படை மின்னணுவியல், கோடிங், 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து செயல் விளக்கம் மற்றும் கருத்துரை ஆற்றினர். இதன் மூலம் ‘ஸ்டெம் ரோபோடிக்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 6 மாத காலத்துக்கு நடைபெற உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். இதேபோல், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். நிகழ்வில் மண்டல அறிவியல் மையத்தை சார்ந்த எம். அன்பானந்தம், என்.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.