ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு  இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

ஐடிஐ | கோப்புப் படம்
ஐடிஐ | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசாணை (நிலை) எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(எஸ்.1) துறை நாள். 30.03.2022-ன்படி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் (SOP) ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in