நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பங்காற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் அறிவுரை

சென்னை விஐடி வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன்
சென்னை விஐடி வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன்
Updated on
1 min read

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பங்காற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வரும் விஐடி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முனைவர் எம்.ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மாணவர்கள் நாட்டின் எதிர்காலமாக திகழ்கின்றனர். மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வதற்கு அடிப்படை உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. அதேபோல், அடிப்படை கடமைகளையும் வழங்கியுள்ளது. அந்த கடமைகளை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” என்றார்.

பின்னர், மாணவ - மாணவிகளின் தேசபக்தி குறித்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில், விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் முனைவர். வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் முனைவர். பி.கே. மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in