Published : 24 Dec 2022 06:43 AM
Last Updated : 24 Dec 2022 06:43 AM

இந்திய வனப்பணிக்கான முதன்மை தேர்வில் சங்கர் ஐஏஎஸ் மாணவர்கள் 225 பேர் தேர்ச்சி

சென்னை: மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப்பணிக்கான (ஐஎஃப்எஸ்) முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டன. இதில் இந்தியாமுழுவதிலுமிருந்து 366 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 225 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். அதேபோல தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ள 21 மாணவர்களில் 12 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்.

இந்திய வனப்பணிக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2022-ம்ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வு 2022 நவம்பர் 20 முதல் நடைபெற்றது. 2022-ம் ஆண்டு இந்திய வனப்பணிக்கானமொத்த காலி பணியிடங்கள் 151 ஆகும்.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அளிப்பது தொடர்பான விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று மத்திய தேர்வாணையம் தனது வலைத்தளத்தில் கூறியுள்ளது.

முதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாகப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் அல்லது 6379784702 / 9003073321 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x