தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சை மேற்படிப்பு தொடக்கம்

அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பை  தொடங்கிவைத்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பை  தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சை மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவ பட்ட மேற்படிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சை மேற்படிப்பு உருவாக்கபட்டுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு குறைய வாய்ப்புள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தற்போது தமிழக மாணவர்கள் அதிக அளவு சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியான தருணம்.

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உணவு தரமாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு இருந்தது. தற்போது பிரச்சனை சரிசெய்யபட்டுள்ளது. எம்.ஆர்.பி செலவியர்கள் பணி நிரந்தரம், வரன்முறை ஆகியவை நிதிநிலைமை பொறுத்து படிப்படியாக செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ளவும், தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மருத்துவ நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது" என்று அமைச்சர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in