6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு: சென்னை ஐஐடி உருவாக்குகிறது

6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு: சென்னை ஐஐடி உருவாக்குகிறது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பை, சென்னை ஐஐடிஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தமிழக பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கல்வியானது தற்போது டிஜிட்டல் கற்றல் தளம்மூலம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மற்றும்தமிழக பள்ளிக்கல்வித் துறையினர் இணைந்து, தற்போதுள்ள டிஜிட்டல் கற்றல் தளத்தை மேம்படுத்தி, அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர்.

செயல்திறன் மதிப்பீடு: இதில், மதிப்பீடு உருவாக்கம், மோசடிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட செயல்திறன் மதிப்பீடு, மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை கண்காணிக்கும் டாஷ்போர்டுகள், பள்ளி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு ஆகியவை அடங்கி உள்ளதாக சென்னை ஐஐடி கூறியுள்ளது.

அந்த வகையில், சென்னை ஐஐடி, தமிழக பள்ளிக்கல்வித் துறைஇணைந்து 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்காக 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டஉயர்தொழில் நுட்ப ஆய்வகங்களில், இந்த கற்றல் மேலாண்மைஅமைப்பை உருவாக்கி வருவதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிக்கு, மேலாண்மை ஆய்வுகள் துறையின் இணைப்பேராசிரியரும், தரவு அறிவியல்மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஷ் மையத்தின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் நந்தன் சுதர்சனம், முதன்மை ஆய்வாளராக உள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைஆணையர் கே.நந்தகுமார் கூறும்போது, "திறன் அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் மாதிரியைநோக்கி மாநிலம் நகர்கிறது. சென்னை ஐஐடி உடனான எங்கள்கூட்டு முயற்சி, மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in