

சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டுவரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வரும் 23.11.22 அன்று தொடங்குகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 குரூப்-1 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட சுமார் 5100 குரூப்-2 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஆகியவற்றுக்கு மாதிரி தேர்வுகள் பயிற்சியின்போது வழங்கப்படுகின்றன.
மேலும் தமிழ் கட்டாயத் தகுதிப் பாடத்துக்கும் மாதிரி தேர்வுகள் உண்டு. ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ், ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
தகுதியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத் தேர்வர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் உண்டு. பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை,அண்ணாநகர் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.