திருக்கோவிலூர் அரசு கிளை நூலகத்தை பயன்படுத்தி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

நூலகத்தில் நடந்த பாராட்டு விழா
நூலகத்தில் நடந்த பாராட்டு விழா
Updated on
1 min read

திருக்கோவிலூர்: தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவிலூர் முழு நேர நூலகத்தை பயன்படுத்தி குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு திருக்கோவிலூர் நூலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அரசு கிளை நூலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு பொது அறிவு நூல்களை அமைத்து, நூலகத்தில் படிக்க நூலகர் அன்பழகன் மற்றும் அதன் புரவலர்கள் ஏற்பாடு செய்தனர். அதையொட்டி 300-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வை எதிர்கொண்ட இளைஞர்கள், சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு ஏதும் செல்லாமல், நூலகத்தில் உள்ள புத்தகங்களைக் கொண்டு பயின்று தேர்வெழுதினர்.

அந்த வகையில் தேர்வெழுதிய இளைஞர்களில் கலர்புரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சடைகட்டி வேணுகோபால், சந்தப்பேட்டை ராஜ்குமார், வீரபாண்டியைச் சேர்ந்த நீதி அரசன், இரும்பாலக்குறிச்சியைச் சேர்ந்த ராம்குமார், கல்லந்தலைச் சேர்ந்த இளவரசன், நெடுங்கப்பட்டைச் சேர்ந்த அந்தோணி, அரகண்டநல்லூரைச் சேர்ந்த அன்பு, தேவனூரைச் சேர்ந்த சதீஷ்குமார், மணிகண்டன், கொல்லூரைச் சேர்ந்த அன்பு உள்ளிட்ட 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவ்வாறு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. இதில் வாசகர் வட்ட குழு தலைவர் சிங்கார உதியன் தலைமை வகித்தார். நல் நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருக்கோவிலூர் நகராட்சித் தலைவர் டி.என்.முருகன் அனைவருக்கும் பயனாடை அணிவித்து நூல்களை பரிசாக வழங்கினார். நூலகர் வி.தியாகராஜன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in