

கடலூர்: ஊழலற்ற தேசத்தை வளர்க்கும் வகையில், ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’ நிகழ்வையொட்டி என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி - வினா போட்டியை நடத்தியது.
சீனியர் பிரிவு: இதைத் தொடர்ந்து நெய்வேலியில் நேற்று மாநில அளவிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில் சீனியர் பிரிவில் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த முருகேஷ் குமார், சேரன் ராம் ஆகியோர் முதலிடத்தையும், கோயம்புத்தூர் சின்மயா இன்டர் நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியைச் சேர்ந்த சர்வேஷ், ஆதித்தியன் ஆகியோர் 2-ம் இடத்தையும், நெய்வேலி செயின்ட் ஜோசப் குளுனி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த ரோஷினி, சவுமியா ஆகியோர் 3-வது இடத்தையும், நெய்வேலி செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆதித்ய விபு, தசரத் ஆகியோர் 4-வது இடத்தையும், சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியைச் சேர்ந்த சிவ் நிர்மல், ஹரி மகாதேவன் ஆகியோர் 5-வது இடத்தையும், சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மகேஷ், சிவாஜி ஆகியோர் 6-ம் இடத்தையும் பெற்றனர்.
ஜூனியர் பிரிவு:
ஜூனியர் பிரிவில் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஹரிச்சரன், கார்த்திக்லக்ஷ்மன் முதல் இடத்தையும், கோயம்புத்தூர் சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியைச் சேர்ந்த அரனவ் சரப்,ராயன் சேட்டர்ஜி ஆகியோர் 2-ம்இடத்தையும், தஞ்சாவூர் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியைச் சேர்ந்த யோகேஸ்வரன், நிதின் ஆகியோர் 3-வது இடத்தையும் பெற்றனர். நெய்வேலி செயின்ட் ஜோசப் குளுனி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த நித்ரா, சக்திபிரியா ஆகியோர் 4-வது இடத்தையும், நெய்வேலி 6-வது பிளாக்கில் உள்ள ஜூனியர் ஜவகர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்தஹரி, அரிச்செல்வன் ஆகியோர் 5-வது இடத்தையும், நெய்வேலி கேந்திர வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஷிவானி, அஜய் நந்தா ஆகியோர் 6-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு என்எல்சி இந்தியநிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அலுவலர் சந்திரசேகர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில், ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் (விற்பனை) ராஜ்குமார் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த விநாடி - வினா போட்டியை எக்ஸ்குவிஸ் இட், குவிஸ் மாஸ்டர்கள் அரவிந்த், ஸ்ரவண் தீபன் ஆகியோர் நடத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: இந்நிகழ்வில் பங்கேற்ற பெற்றோர், ‘இந்து தமிழ் திசை’, ‘என்எல்சி இந்தியா நிறுவனம்’ மாணவர்களுக்கு இது போன்றநிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர்.