ஆசிரியர் பணி தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு - டிசம்பரில் நடத்த டிஆர்பி திட்டம்

ஆசிரியர் பணி தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு - டிசம்பரில் நடத்த டிஆர்பி திட்டம்
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் பணி தகுதிக்கான 2-ம் தாள் தேர்வை கணினி வழியில் டிசம்பரில் நடத்துவதற்கு தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.

இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ம்‌ தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும்‌ விண்ணப்பித்தனர்‌. இவர்களுக்கான தேர்வை 2 கட்டமாக நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி முதல் தாள் தேர்வு அக்டோபர் 14 முதல்19-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியதாகக் கூறப்படுகிறது.

விரைவில் தேர்வு அட்டவணை: இதற்கிடையே 2-ம் தாள் தேர்வெழுத 4 லட்சத்து 1,886 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தேர்வை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணை இறுதிசெய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும். கணினி வழித்தேர்வு கல்லூரிகளில் நடத்தப்பட உள்ளதால் பருவ விடுமுறையை கணக்கில் கொண்டு தேதிகள் நிர்ண யிக்கப்படும் என்று துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in