305 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.8.38 கோடி நிதி ஒதுக்கீடு

305 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.8.38 கோடி நிதி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் 305 பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, அலமாரிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.8.38 கோடி நிதிஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் வெளியிட்டசெய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில், மானிய கோரிக்கையின் போது ‘‘ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணவர்கள் வசதியாக கல்விபயிலும் வகையில் 99 நடுநிலைப்பள்ளிகள் 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு தேவையான இரும்பு அலமாரி ஆகிய அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ரூ.7.46 கோடி செலவில் வழங்கப்படும்” என அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும்பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதன் மூலம் கல்வி கற்பதற்கான சிறந்த சூழலை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில், 99 நடுநிலை, 108 உயர்நிலை, 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 305பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கை, இரும்பு அலமாரிகள் டான்சி மூலம் வாங்கி வழங்க ரூ.8,37,91,008 நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in