Published : 04 Nov 2022 06:45 AM
Last Updated : 04 Nov 2022 06:45 AM

தமிழக மாணவர்கள் அதிகளவில் படிக்கும் ராஜஸ்தான் ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி: சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.15 கடைசி

சென்னை

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்-கோட்டா ஹைவே, டோங் மாவட்டத்தில் உள்ள ஹாசன்பூரில் உள்ளது ஆர்.ஆர். கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். கால்நடை மருத்துவமனையுடன் அமைந்துள்ள இந்த கல்லூரியில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரியில் உள்ள ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். எனும் கால்நடை மருத்துவப் படிப்பில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும்; தேர்ச்சி தேவையில்லை.

இந்த கால்நடை மருத்துவப் படிப்பைப் படித்தால் அரசு கால்நடை மருத்துவர், அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய மத்திய, மாநில அரசு வேலைகளில் சேரலாம்.

மேலும், கால்நடை மருத்துவமனை அமைக்கலாம். இதில் ஆராய்ச்சி மேற்கொண்டால் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரியலாம். இந்தப் படிப்புக்கு உள்நாடு, வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.

இக்கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகளும், தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய வளாகம், ஹைடெக் மாட்டுப் பண்ணை மற்றும் முயல் பண்ணைகள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. இக்கல்லூரியில் சேர நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தருமபுரி, பெங்களூரு ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரியின் தென்னிந்திய சேர்க்கை மையங்களைத் தொடர்புகொள்ளவும். www.rrvetcollege.org என்ற இணையப் பக்கத்திலும் பார்க்கலாம். மாணவர் சேர்க்கைக்கு 9626721411 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x