Published : 30 Oct 2022 09:48 AM
Last Updated : 30 Oct 2022 09:48 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதஉள்இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில்சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கு தற்போது நடந்து முடிந்துள்ள முதல்கட்ட கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் என்பதால், முதல் ஆண்டில்ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் இணைந்து மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிட்டுள்ளன.

முதல்கட்டமாக மாணவர்களுக்கான ‘கிரேஸ் அனாடமி கைட்டன்’,‘ஹால் டெக்ஸ்ட் புக் ஆஃப் மெடிக்கல் பிசியாலஜி’ உள்ளிட்ட4 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் 30-க்கும்மேற்பட்ட மருத்துவப் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவக் கல்விஇயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ் பாடத் திட்டங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. தாய்மொழியில் மருத்துவம் தொடர்பான புரிதலுக்கு இது உதவியாக இருக்கும். ஆனால், தேர்வை தமிழில் எழுதுவது குறித்து முடிவு எடுக்கவில்லை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x