

சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மேஷன் (Mason) எனும் ஓராண்டு கால கட்டிடம் கட்டுதல் தொடர்பான படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த படிப்பில் சேர மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும், பயிற்சி முடிப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானத் துறை சார்ந்த பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த படிப்பு அம்பத்தூர் ஐடிஐ-யில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. இதனால், அரசுப் பணிகளில் போட்டியின்றி வேலை கிடைக்கும். இந்த படிப்பில் சேரவிரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அக்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேஷன் படிப்பில் சேருபவர்களுக்கு இலவச மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, வரைபட கருவிகள், பஸ் பாஸ், பாடப்புத்தகம் மற்றும் காலணியுடன் சேர்த்து மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750 அரசால் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு அம்பத்தூர் தொழிற் பயிற்சி மைய அலுவலரை 98404 89498 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.