கேட் நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியீடு

கேட் நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐஎம் உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட் (CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான கேட்தேர்வு நவ.27-ல் நடைபெற உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு, தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை iimcat.ac.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கேட் தேர்வு முடிவுகள் அடுத்தஆண்டு ஜனவரி 2-ம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஐஐஎம் தவிர்த்து மற்றகல்வி நிறுவனங்களிலும் இந்தமதிப்பெண் மூலம் மேலாண்மை படிப்புகளில் பட்டதாரிகள் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in