

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட
தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு (புதியது மற்றும் புதுப்பித்தல்) கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு (புதியது மற்றும் புதுப்பித்தல்) கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.