

சிறுபான்மை பிரிவு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில், முதல் வகுப்பு முதல் பி.ஹெச்டி வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.