மருத்துவப் படிப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு | கோப்புப் படம்
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4328 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரிகளுக்கு ரூ.13,610, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 170 இடங்கள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு ரூ.11,610 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளம் மூலம் அக்.3-ம் தேதி வரை தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in