

சென்னை: துணை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்றுதொடங்குகிறது.
தமிழகத்தில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு 121 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல, 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு 2022-23 கல்வி ஆண்டுக்கு 87,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். பரிசீலனைக்கு பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு https://tnmedicalselection.net மற்றும் https://www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று காலை 10 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை நடக்கிறது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, 24-ம் தேதி முதல் 27-ம்தேதி வரை நடக்கிறது.