Published : 16 Sep 2022 01:42 PM
Last Updated : 16 Sep 2022 01:42 PM

7.5% இடஒதுக்கீடு - ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள்’

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு 121 அரசு கல்லூரிகளில் 2,526 இடங்களுக்கும், 348 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 15,307 இடங்களுக்கான விண்ணப்பங்களும், சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (16-ம் தேதி ) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப் பிரிவு) 58,980 ஆகும். இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 58,141. ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 15,064. பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 43,077 . மருந்தாளுநர் பட்டயப் படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொது பிரிவு) 5271 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 5206. ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 1561, பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 3645 ஆகும்.

டிப்ளமோ செவிலியர் படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப் பிரிவு) 12,624 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 12,478. டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப் பிரிவு) 1055 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 948. பாராமெடிக்கல் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப் பிரிவு) 7793 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 7540.

2020-2021 ஆண்டிற்கான மொத்த மருத்துவப் படிப்பு இடங்கள் 6,025 ஆகும். அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் 336. பல் மருத்துவப் படிப்பு இடங்கள் 1954, அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் இடங்கள் 99 ஆகும். 2021-2022 ஆண்டிற்கான மொத்த மருத்துவ படிப்பு இடங்கள் 8075. அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் இடங்கள் 445. பல் மருத்துவப் படிப்பு இடங்கள் 2060, அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் இடங்கள் 110. 2022-2023 ஆண்டிற்கான மொத்த மருத்துவப் படிப்பு இடங்கள் 8225. அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் இடங்கள் 455. பல் மருத்துவ படிப்பு இடங்கள் 2160, அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் இடங்கள் 114 ஆகவும் உயர்ந்துள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x