

சென்னை: தேசிய அளவிலான தரவரிசையில் முன்னணியில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக சிறப்பு படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்படி இளநிலையில் பி.காம்., பிசிஏ ஆகிய சிறப்பு படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், மாநிலக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பிலும் சிறப்பு பிரிவு தொடங்க உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, 50 இடங்களுடன் எம்.காம். படிப்பு தொடங்கப்பட உள்ளது. அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதி கிடைத்ததும், இந்த கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.